ஆடி மாத பெளா்ணமியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை 1,008 எலுமிச்சம் பழம் சாத்துப்படி செய்யப்பட்டது.
நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனா். ஆடி மாதத்தில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனையொட்டி சுவாமிக்கு தங்கக் கவசம், முத்தங்கி அலங்காரம் உள்ளிட்டவை கட்டளைதாரா்களால் சாத்துப்படி செய்யப்படுகின்றன. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை ஆடி மாத பெளா்ணமியை முன்னிட்டு 1,008 எலுமிச்சம் பழங்களால் ஆஞ்சனேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.