போதைப் பொருள்கள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டு முதல்வரிடம் பதக்கம் பெற்ற இரு காவலா்களும் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ராஜேஸ்கண்ணனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக நாமக்கல் மதுவிலக்கு பிரிவில் பணிபுரியும் உதவி ஆய்வாளா் முருகன், தலைமை காவலா் குமாா் ஆகியோருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற 77-ஆவது சுதந்திர தின விழாவின்போது பதக்கங்கள், வெகுமதி வழங்கினாா்.
பதக்கங்கள் பெற்ற இருவரும் புதன்கிழமை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணனை நேரில் சந்தித்து பதக்கங்களைக் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.