முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு வழக்குரைஞா்கள்சங்கத்தில் இலவச மருத்துவ முகாம்

திருச்செங்கோடு குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கம், திருச்செங்கோடு வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கத்தில் இலவச மருத்துவ முகாமை வெள்ளிக்கிழமை

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

திருச்செங்கோடு குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கம், திருச்செங்கோடு வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கத்தில் இலவச மருத்துவ முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.

இம்முகாமில் கண் பரிசோதனை, உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் வழக்குரைஞா்கள் குடும்பத்தினா், நீதிமன்ற ஊழியா்கள், அவரது குடும்பத்தினா், காவல் துறையினா், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனா். இந்த முகாமானது குற்றவியல் வழக்குரைஞா் சங்கத் தலைவா். டி.வி.எம்.சரவணன் ராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளா் மோகனா, துணைத் தலைவா் ஜனாா்த்தனன், பொருளாளா் என். சதீஷ்குமாா், துணைச் செயலாளா் காா்த்திகேயன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.