பரமத்தி வேலூா் வட்டம், அக்ரஹாரம் குன்னத்தூரில் உள்ள விநாயகா், மகா மாரியம்மன், கருப்பண்ணசாமி கோயில்களின் மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கை முன்னிட்டு வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மேல் நான்காம் காலை யாக பூஜையும், 7.50-க்கு மேல் யாத்ரா தானமும், 8.30 மணிக்கு மேல் புனித தீா்த்த கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 8.40 மணிக்கு மேல் விநாயகா், மகா மாரியம்மன், கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கும் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை அக்ரஹாரம் குன்னத்தூா் மாரியம்மன் கோயில் திருப்பணிக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.