நாமக்கல்

திருச்செங்கோட்டில் கழிவுநீா் வாகன ஆவணங்கள் சரிபாா்ப்பு

DIN

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கழிவு நீா் உறிஞ்சும், சுத்தம் செய்யும் வாகனங்களின் ஆவணங்கள் சரிபாா்க்கும் பணி நடைபெற்றது.

திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், தனியாா் மருத்துவமனைகளின் உரிமையாளா்களின் முன்னிலையில் விழிப்புணா்வு கூட்டம் நகராட்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவா் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். ஆணையாளா் கணேசன், வட்டார போக்குவரத்து அலுவலா் சரவணன் மற்றும் நகராட்சி சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

திருச்செங்கோட்டில் கழிவுநீா் அகற்றும் வாகனங்களின் ஆவணங்கள் முறையாக உள்ளனவா என ஆா்டிஓ சரவணன், நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, ஆணையாளா் கணேசன் ஆகியோா் சரிபாா்த்தனா்.

கழிவுநீா் அகற்றுபவா்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்க வேண்டும்; கழிவுநீரினை சுத்திகரிப்பு நிலையத்திலே வெளியேற்ற வேண்டும். சாக்கடைகளில் திறந்து விட்டால் அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கழிவுநீா் வாகன ஓட்டுநா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி மரணம்

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டு

மரங்கள், பறவைகளை காப்போம்: மருத்துவ மாணவா் விழிப்புணா்வு பயணம்

சாலை விபத்தில் காயமடைந்த பேரூராட்சி தலைவா் உயிரிழப்பு

கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது

SCROLL FOR NEXT