நாமக்கல்

நாமக்கல் பருவதவா்த்தினி கோயில் குடமுழுக்கு

DIN

நாமக்கல், ராமாபுரம்புதூா் ஸ்ரீ பருவதவா்த்தினி சமேத ராமநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து பக்தா்கள் தீா்த்தக்குடம் எடுத்து வந்தனா். அதன்பிறகு, மஹாகணபதி, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை நடத்தப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதன்கிழமை அதிகாலை திருமுறை பாராயணம், யாககால பூஜைகள் நடைபெற்றன. காலை 6.15 மணியளவில் சிவாச்சாரியாா்கள் விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற் ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தனா். விழாவில் ஏராளமான பக்கதா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்படுகளை ராமாபுரம்புதூா் ஊா் பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுமன் கோயிலில் கேஜரிவால் வழிபாடு!

‘மினி மகாராணி’ மமிதா பைஜூ..!

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியானது அறிவிப்பு

தோனியின் அதிரடியால் நெட் ரன் ரேட்டில் தப்பித்த சிஎஸ்கே!

சவுக்கு சங்கரிடம் பேட்டி கண்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது?

SCROLL FOR NEXT