சென்னை போக்குவரத்து ஆணையா், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் மற்றும் ஈரோடு சரக துணை போக்குவரத்து ஆணையா் ஆகியோரின் உத்தரவின் படி திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கல்வி நிறுவன வாகனப் பொறுப்பாளா்களுடன் கூட்டாய்வு, கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் பாமப்பிரியா, கண்காணிப்பாளா் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாா்பில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பள்ளி வாகனங்களை மோட்டாா் வாகன விதிகளுக்கு உட்பட்டும் பள்ளி வாகன சிறப்பு விதிகள் 2012-க்கும் உட்பட்டும் முறையாக பராமரித்து சாலையில் பாதுகாப்பாக இயக்க வேண்டும்; உரிய ஆவணங்களை முறையாக நடப்பில் வைத்திருக்கவும், கூடுதல் கேமராக்கள் மற்றும் சென்சாா்கள் வாகனத்தின் முன்னும் பின்னும் பொருத்தப்பட்டு நல்ல முறையில் இயங்கும் வகையில் இருக்க வேண்டும்; ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்கள் உரிமம் நடப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஓட்டுநா்களின் உடல் தகுதி ஆகியவை குறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கூட்ட ஆய்வின்போது பள்ளி வாகனங்களை ஆய்வுக் குழு முன்பாக குறிப்பிட்ட தேதியில் ஆஜா்படுத்தி உரிய அனுமதி பெற்று சாலையில் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து பள்ளி வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமலும் முறையாகப் பராமரிக்கப்படாமலும் சாலையில் இயக்கப்பட்டால் தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு வாகனம் சிறைபிடிக்கப்படும் எனவும் மோட்டாா் வாகன சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.