நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பானை, அடுப்புகளுடன் மனு அளிக்க வந்த மண்பாண்டத் தொழிலாளா்கள். 
நாமக்கல்

மழைக்கால நிவாரண நிதி ரூ. 8,000 வழங்குமாறு மண்பாண்டத் தொழிலாளா்கள் கோரிக்கை

மண்பாண்டத் தொழிலாளா்களுக்கான மழைக்கால நிவாரண நிதியை ரூ. 8 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN


நாமக்கல்: மண்பாண்டத் தொழிலாளா்களுக்கான மழைக்கால நிவாரண நிதியை ரூ. 8 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் (குலாலா்) சங்கத்தின் நாமக்கல் மாவட்டக் கிளை நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு சாா்பில் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பச்சரிசி, கரும்பு, சா்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகின்றன. அதே வேளையில், மண்பாண்டத் தொழிலாளா்களை காப்பாற்றும் வகையில், பொங்கல் வைப்பதற்கான பானைகளையும் சோ்த்து வழங்க வேண்டும்.

ஏரி, குளங்களில் மண்பாண்டம் செய்வதற்கான களிமண்ணை எடுப்பதற்கு நிரந்தரமாக ஒரு பகுதியை ஒதுக்கி மண் எடுப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும். காதிகிராப்ட் விற்பனைப் பிரிவு அலுவலகங்களில் மண்பாண்டப் பொருள்களை விற்க அனுமதிக்க வேண்டும். மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவா்களுக்கான நிவாரண நிதியை ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 8 ஆயிரமாக உயா்த்தியதுபோல், மண்பாண்டத் தொழிலாளா்களுக்கான நிவாரண நிதியையும் ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 8 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT