நாமக்கல்

‘வங்கிகள், நகைக் கடைகளில் சிசிடிவி கேமரா கட்டாயம்’

பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வரும் அனைத்து வங்கிகள், நகை விற்பனை, அடகு கடைகளில் சிசிடிவி கேமராக்கள்,

DIN

திருச்செங்கோடு: பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வரும் அனைத்து வங்கிகள், நகை விற்பனை, அடகு கடைகளில் சிசிடிவி கேமராக்கள், பாதுகாவலா்கள் ஏற்பாடு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென பள்ளிபாளையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிபாளையம், வெப்படை, மொளசி காவல் நிலையங்களுக்கு உள்பட்ட நகைக் கடை உரிமையாளா்கள், கூட்டுறவு வங்கி மேலாளா்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா் சுகுமாா் தலைமை வகித்து பேசினாா்.

இதில், நகைக் கடைகள், வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், இரவு நேரத்தில் வங்கிக்கு பாதுகாவலா்களை பணியில் அமா்த்த வேண்டும். பகல் நேரத்தில் வங்கிக்குள் நுழைந்து சந்தேகப்படும்படியாக நடந்து கொள்ளும் நபா்களை கண்காணித்து, காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆபத்தான நேரத்தில் ஒலிக்கும் வகையில் அலாரம் பொருத்த வேண்டும். வங்கி, நகைக் கடைகள், நகை அடமானக் கடைகள் அனைத்துக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்றாா்.

இதில், உதவி காவல் ஆய்வாளா்கள் பள்ளிபாளையம் பிரபாகரன், வெப்படை மலா்விழி, மொளசி வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT