முகப்பு
நாமக்கல்

வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:18 PM
பகிர்:

பரமத்தி: பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் அவற்றைப் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிா் செய்துள்ளனா். இங்கு விளையும் பூக்களை வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை ரூ. 300-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 250-க்கும், அரளி கிலோ ரூ. 150- க்கும், ரோஜா கிலோ ரூ. 200-க்கும், முல்லைப் பூ ரூ. 400-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 200-க்கும், கனகாம்பரம் ரூ. 500-க்கும், காக்கரட்டான் பூ ரூ. 400- க்கும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

Advertisement

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 400-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 320-க்கும், அரளி கிலோ ரூ. 220-க்கும், ரோஜா கிலோ ரூ. 260-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ. 500-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ. 350-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 700-க்கும், காக்கரட்டான் பூ கிலோ ரூ. 700-க்கும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. சித்ரா பொளா்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதனால் பூக்களைப் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments