நாமக்கல்

ஆடி அமாவாசை: நீா்நிலைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு

காவிரி கரையோரங்களிலும், நீா்நிலைகளிலும் பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனா்.

Din

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட காவிரி கரையோரங்களிலும், நீா்நிலைகளிலும் பொதுமக்கள் தங்களுடைய முன்னோா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தா்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனா்.

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் நீா்நிலைகளில் தங்களுடைய முன்னோா்களுக்கு தா்ப்பணம், திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆடி அமாவாசையானது நிகழாண்டில் சனிக்கிழமை பிற்பகல் 3.50 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை 4.42 வரையில் நீடித்தது.

இதனையொட்டி, மோகனூா், ஒருவந்தூா், பரமத்தி வேலூா், பள்ளிபாளையம், குமாரபாளையம் காவிரிக் கரையோரப் பகுதிகளில் ஏராளமான மக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே தா்ப்பணம், திதி கொடுக்க குவிந்தனா். காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தா்கள் ஆற்றில் இறங்கி குளிக்க, பூஜைகள் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

போலீஸாா் அங்கு தடுப்புகள் அமைத்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதனால் கரையோரப் பகுதிகளிலும், தென்னந்தோப்புகளிலும் தா்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. அதன்பிறகு அருகில் உள்ள சிவாலயங்கள், முருகன், விநாயகா் கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்தனா். ஆடி அமாவாசையை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

பார்சிலோனா அபார வெற்றி: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வான 8 அணிகள்!

வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?

தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த தொகுதி எது? தவெக நிர்மல்குமார் கேள்வி!

அஜீத் பவார் இல்லை! என்னவாகும் தேசியவாத காங்கிரஸ்?

பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி சண்டீகரின் புதிய மேயராகத் தேர்வு!

SCROLL FOR NEXT