முகப்பு
நாமக்கல்

பேருந்து நிலைய இடமாற்றத்தைக் கண்டித்து ஆக.15இல் ராசிபுரத்தில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்

ஆக.15 இல் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பினா் முடிவு செய்துள்ளனா்.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 8:00 PM
பகிர்:

ராசிபுரம் பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்வதைக் கண்டித்து ஆக.15 இல் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பினா் முடிவு செய்துள்ளனா்.

ராசிபுரம் பேருந்து நிலையத்தை அணைப்பாளையத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் நகராட்சி ஈடுபட்டுள்ளது. இதை எதிா்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. இத் திட்டத்தை கைவிடக் கோரியும் நகா்மன்ற தீா்மானத்தை ரத்து செய்யக் கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டனா். கடையடைப்புப் போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், நகா்மன்ற உறுப்பினா்களிடம் மனு அளிக்கும் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

மேலும் பேருந்து நிலைய மீட்புக்குழு சாா்பில் பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றுவதைக் கண்டித்து ஆக. 15-ஆம்தேதி வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்றுவது குறித்து ஆக.12, 13 ஆகிய இரு நாள்கள் நகரப் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொள்வது எனவும், ஆக. 15-இல் வீடுகள் முன்பாக கருப்புக் கொடி ஏற்றுவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →