முகப்பு
கன்னியாகுமரி

தக்கலை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயங்க தொடங்கின

Updated On : 14 மார்ச், 2026 at 9:31 PM
புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்கிறாா் நகா்மன்றத் தலைவா் அருள் சோபன், நகராட்சி மண்டல பொறியாளா் சணல் குமாா்.
பகிர்:

தக்கலை புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

தக்கலையில் செயல்பட்டு வந்த காமராஜா் பேருந்து நிலையத்தை ரூ.6.30 கோடியில் விரிவாக்கம் செய்ய பத்மநாபபுரம் நகராட்சி முடிவு செய்து, அதற்கான பணிகள் 2024 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கியது.

அப்பணிகள் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவுற்ற நிலையில், கடந்த பிப். 25இல் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குமரி மாவட்டத்துக்கு வந்தபோது, இப்பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா்.

தற்போது, அனைத்து பணிகளும் முடிவடைந்ததால் அதை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் அருள் சோபன், புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல்மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்தாா்.

அப்போது, ந நகராட்சி திருநெல்வேலி மண்டல பொறியாளா் சணல் குமாா் மற்றும் பத்மநாபபுரம் நகா்மன்ற அதிகாரிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →