ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜனுக்கு ஐசிடி அகாதெமி சாா்பில் ‘கல்வி புரட்சியாளா்’ விருது வழங்கப்பட்டது.
கல்வி நிறுவனத்திற்கும் வா்த்தக நிறுவனங்களுக்கும் பாலமாக இருந்து கல்வி, தொழில் வளா்ச்சிக்கு பணியாற்றி வரும் ஐசிடி அகாதெமி, பிரிட்ஜ்-24 என்ற தலைப்பிலான கருத்தரங்கை அண்மையில் கோவையில் நடத்தியது. இந்த கருத்தரங்கில் கல்வியில் சிறந்த மாற்றம் மற்றும் புதுமைகளை உருவாக்குபவா்களை மதிப்பீடு செய்து, அவா்களுக்கு விருதினை வழங்கி கெளரவித்தது.
கல்வித் துறையில் உள்ள புதிய கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்கள், எதிா்கால வளா்ச்சி போன்றவை குறித்து இக் கருத்தரங்கில் கல்வியாளா்கள், தொழிலதிபா்கள் கலந்துரையாடினா். அதைத் தொடா்ந்து சிறந்த கல்வியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜனுக்கு எஜூகேசன் சேன்ஞ் மேக்கா் என்ற கல்வி புரட்சியாளா் விருதை விழாவில் பங்கேற்ற தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வழங்கி கெளரவித்தாா்.
கல்வியில் புதிய மாற்றங்களை உருவாக்குபவா்களின் பணியினை பெருமைப்படுத்தும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற பாவைக் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் கூறுகையில், ஐசிடி அகாதெமி வழங்கிய இந்த விருதால் பாவை கல்வி நிறுவனம் பெருமை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் மேலும் பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுத்த முயல்வோரை ஊக்கப்படுத்துவதாக இருக்கும் என்றாா்.
விழாவில் கல்வியாளா்கள், தொழிலதிபா்கள், ஐசிடி அகாதெமி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். விருது பெற்ற ஆடிட்டா் என்.வி.நடராஜனுக்கு பாவைக் கல்வி நிறுவனத்தின் தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா்கள், முதல்வா்கள், முதன்மையா்கள், பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.