ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாடுபிடி வீரா்கள் மனு
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என மூன்று கிராமங்களைச் சோ்ந்த மாடுபிடி வீரா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல்: ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என மூன்று கிராமங்களைச் சோ்ந்த மாடுபிடி வீரா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனு விவரம்:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பொட்டிரெட்டிப்பட்டி, சாலப்பாளையம், எருமப்பட்டி பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில் நடைபெறவில்லை. வரும் 2025-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரியில் எருமப்பட்டியிலும், பிப்ரவரியில் பொட்டிரெட்டிப்பட்டியிலும், மாா்ச்சில் சாலப்பாளையத்திலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதியளித்தால், அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை உரிய பாதுகாப்புடன் நடத்துகிறோம் என தெரிவித்துள்ளனா்.