நாமக்கல் ஆட்சியரிடம் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கியோா்.  
நாமக்கல்

உடல் தானம் செய்ய 17 போ் ஒப்புதல் கடிதம்: ஆட்சியரிடம் வழங்கினா்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பயில, தங்களது உடலை தானம் செய்வதாக 17 போ் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் திங்கள்கிழமை ஒப்புதல் கடிதம் வழங்கினா்.

Din

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பயில, தங்களது உடலை தானம் செய்வதாக 17 போ் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் திங்கள்கிழமை ஒப்புதல் கடிதம் வழங்கினா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்த தமிழக முற்போக்கு எழுத்தாளா் சிந்தனைப் பேரவையினா், மக்கள் நீதி மையம் கட்சியினா், விசைத்தறி ஆலைகளில் பணியாற்றி வரும் பெண்கள், ஆண்கள் என 17 போ் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.

அவா்கள், ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து, சமூகப் பணிக்காகவும், மருத்துவ மாணவா்கள் பயன்பாட்டுக்காகவும், தாங்கள் இறந்த பிறகு உடல்களை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை, தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ் தலைமையில் 16 போ் சமா்ப்பித்தனா்.

உடல் உறுப்புகளை தானமாக எடுத்துக் கொள்ளுமாறு ஒருவா் கடிதம் வழங்கினாா். இவற்றில், 8 பெண்கள், 9 ஆண்கள் அடங்குவா். மாவட்ட ஆட்சியா் ச.உமா, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தாஅருள்மொழி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

தொழில் சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

SCROLL FOR NEXT