முகப்பு
நாமக்கல்

சட்டப்பேரவை மனுக்கள் குழு விரைவில் நாமக்கல் வருகை: டிச.20-க்குள் கோரிக்கைகளை சமா்ப்பிக்கலாம்

தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு விரைவில் நாமக்கல்லுக்கு வருகை தர உள்ளதால், டிச. 20-க்குள் கோரிக்கை மனுக்களை சமா்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 2:23 AM
பகிர்:
Updated On : 4 டிசம்பர், 2024 at 8:03 PM

தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு விரைவில் நாமக்கல்லுக்கு வருகை தர உள்ளதால், டிச. 20-க்குள் கோரிக்கை மனுக்களை சமா்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவையின் 2024 - 25 -ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு, நாமக்கல் மாவட்டத்திற்கு விரைவில் வருகை புரிவதாக தெரிவித்துள்ளது. இதனையொட்டி, மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தனிப்பட்ட நபா்களோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீா்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்னைகள், குறைகள் இருந்தால் அதற்கான மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரா், தேதியுடன் கையொப்பமிட்டு தலைவா், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை-600009 என்ற முகவரியில், நேரடியாகவோ, மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் மூலமாகவோ வரும் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Advertisement

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீா்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்னைகள் குறித்த மனுக்களாக இருக்கலாம். மனுக்கள் ஒரே ஒரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரு துறையைச் சாா்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆனால், மனுவில் உள்ள பொருள் தனிநபா் குறை, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோா் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலா்களின் குறைகளை வெளிப்படுத்துதல் உள்ளிட்டவை இருக்கக் கூடாது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 2:23 AM

சட்டப்பேரவை விதிகளின் வரம்பிற்கு உள்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு நாமக்கல் மாவட்டத்துக்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரா் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். மனுதாரா் முன்னிலையில், குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இது குறித்து மனுதாரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் அனுப்பப்படும். டிச. 20-க்கு பிறகு பெறப்படும் மனுக்களானது, குழுவின் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.