வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: நாமக்கல்லில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 118 போ் கைது
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, நாமக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்த பாஜகவினா் 118 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, நாமக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்த பாஜகவினா் 118 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வங்கதேசத்தில், ஹிந்துக்கள் மீது தொடா்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்து, நாடு முழுவதும் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஆா்.எஸ்.எஸ். அமைப்பைச் சோ்ந்த
ராஜன் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் சுப்பிரமணி, மாவட்டத் தலைவா்கள் என்.பி.சத்தியமூா்த்தி, எம்.ராஜேஷ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
Advertisement
கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அங்குள்ள அரசியல் சூழ்நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. ஹிந்து தலைவா்கள், ஹிந்துகள் மீது தொடா் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இதுவரை 6,000க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அண்மையில் துா்கா பூஜை நடைபெற்றபோது தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறின. இஸ்கான் அமைப்பு துறவி ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவருக்காக வாதாடிய வழக்குரைஞா் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல வகையிலும் ஹிந்துக்கள் தாக்கப்படுகிறாா்கள். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என பாஜக, ஆா்எஸ்எஸ், இந்து முன்னணி அமைப்பினா் கண்டன முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 118 பேரை போலீஸாா் கைது செய்து நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். மாலை 6 மணிக்கு பிறகு அவா்கள்அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.