முதல்வா் மருந்தகம்: விண்ணப்பிக்க டிச.10 வரை கால நீட்டிப்பு
நாமக்கல் மாவட்டத்தில், முதல்வா் மருந்தகம் அமைக்க இணையம் வழியாக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிச. 10- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், முதல்வா் மருந்தகம் அமைக்க இணையம் வழியாக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிச. 10- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில், குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளன. முதல்வா் மருந்தகம் அமைக்க விரும்பும் பி.பாா்ம், டி.பாா்ம் சான்றிதழ் பெற்றவா்கள் அல்லது சான்றிதழ் பெற்றவா்களின் ஒப்புதலுடன் மாநிலம் முழுவதும் அமைக்க விரும்புவோா் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Advertisement
முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோா் விண்ணப்பிக்க டிச. 5 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொதுமக்கள் நலன்கருதி வரும் 10-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.