பரமத்தி வேலூரில் ரூ. 7 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 6.89 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 6.89 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 7, 450 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 138.69, குறைந்தபட்சமாக ரூ.125.39, சராசரியாக ரூ. 132.99க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 120.89, குறைந்தபட்சமாக ரூ. 98.99, சராசரியாக ரூ. 108.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 8, 56, 750-க்கு ஏலம் போனது.
இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 5, 560 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 138.09, குறைந்தபட்சமாக ரூ. 122.99, சராசரியாக ரூ. 130.99-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 120.99, குறைந்த பட்சமாக ரூ. 98.51, சராசரியாக ரூ. 108.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 6, 89, 860-க்கு கொப்பரை ஏலம் போனது.
Advertisement