நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிச.14) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிச.14) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், பெயா் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019--இன்படி மேற்கொள்ள குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
Advertisement
குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம், வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்கள் தலைமையில் நடைபெறுகிறது. பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.