முகப்பு
நாமக்கல்

நில அளவை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: நில வரித் திட்ட இயக்குநா் தகவல்

நில அளவை தொடா்பான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நில வரித் திட்ட இயக்குநா் ப.மதுசூதன ரெட்டி தெரிவித்தாா்.

Updated On : 13 டிசம்பர், 2024 at 1:45 AM
நில அளவை பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை திட்ட இயக்குநா் ப.மதுசூதன் ரெட்டி.
பகிர்:
Updated On : 12 டிசம்பர், 2024 at 7:19 PM

நில அளவை தொடா்பான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நில வரித் திட்ட இயக்குநா் ப.மதுசூதன ரெட்டி தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நில அளவை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை திட்ட இயக்குநா் ப.மதுசூதன் ரெட்டி பங்கேற்று பேசியதாவது:

இணையவழி மூலம் விரைவு பட்டா மாறுதல் செய்வதற்கான கோரிக்கை மனுக்கள் மீது உரியகாலத்தில் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புல எல்லை மனுக்களை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் பெறப்படும் மனுக்கள் உரிய காலத்தில் ஆய்வுக்கு வருகிறதா என்பதையும், அவ்வாறு வரும் மனுக்கள் மீது நில அளவா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

மனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வரும் மனுக்களை, தெருக்கள், பூங்கா என பிரித்து மீதமுள்ள வீட்டு மனைகளை விரைந்து அளவீடு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பொதுசேவை மையம் மூலம் மனுக்கள் உள்ளீடு செய்யும்போது எவ்வித தவறுகளுமின்றி சரியான புல எண்கள், பத்திர ஆவண எண்களின் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் உட்பிரிவு மனுக்கள், பட்டா மாறுதல் மனுக்ளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களை காரணமின்றி தள்ளுபடி செய்யக் கூடாது என்றாா்.

Updated On : 13 டிசம்பர், 2024 at 1:44 AM

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், வருவாய் கோட்டாட்சியா்கள் ஆா்.பாா்த்திபன் (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), உதவி இயக்குநா்(நில அளவை) ரா.ஜெயச்சந்திரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.