முகப்பு
நாமக்கல்

முட்டை விலை 10 காசுகள் குறைவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 5.50-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

Updated On : 20 டிசம்பர், 2024 at 1:24 AM
பகிர்:
Updated On : 19 டிசம்பர், 2024 at 7:34 PM

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 5.50-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மாா்கழி மாதம் என்பதால் முட்டை விற்பனை சரிவடைந்துள்ளதாலும், பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், இங்கும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

Updated On : 20 டிசம்பர், 2024 at 1:24 AM

இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 5.50-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 93-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 96-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

Advertisement