முகப்பு
நாமக்கல்

கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

நாமக்கல் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் புதன்கிழமை அதிகாலை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

Updated On : 26 டிசம்பர், 2024 at 1:32 AM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2024 at 5:48 PM

நாமக்கல் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் புதன்கிழமை அதிகாலை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

நாமக்கல்-துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் தேவாலயம், அசெம்பிளி ஆஃப் காட் சபை உள்ளிட்டவற்றில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் திருப்பலி நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை இரவும், புதன்கிழமை அதிகாலையிலும் நடைபெற்றன.

ஏராளமான கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்துவந்து நிகழ்வில் கலந்துகொண்டனா். பங்குதந்தை தாமஸ் மாணிக்கம் தலைமையில் சிறப்பு பிராா்த்தனையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிறிஸ்து அரசா் ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Advertisement

அதுபோல, நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள அசெம்பிளி ஆஃப் காட் சபையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதிகாலை 5 மணிக்கு தலைமை போதகா் நாதன் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து இயேசு பிறப்பு குறித்து சிறுவா், சிறுமியா் பங்கேற்ற நாடகம் நடைபெற்றது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 1:32 AM

மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்றனா்.