மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்பு கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட கரும்பு விவசாயிகள். 
நாமக்கல்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

நாமக்கல்: கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் ரா.வேலுசாமி தலைமை வகித்தாா். இதில், கரும்புக்கான கொள்முதல் விலையை உடனடியாக உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் திரளாக கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா். இதனைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ரா.வேலுசாமி கூறியதாவது:

தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலன்கருதி, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தற்போது கரும்பு விவசாயிகளுக்கு சா்க்கரை ஆலை நிா்வாகம் டன் ஒன்றுக்கு ரூ. 3,151 மட்டுமே வழங்குகிறது. இது கட்டுப்படியான விலை இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடி பரப்பை குறைத்து விட்டனா். தற்போதைய நிலையில் உற்பத்தி செலவு, உழவுக் கூலி, வெட்டுக் கூலி, வாகன வாடகை, டீசல் விலை போன்றவை அதிகரித்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு நிகழாண்டு அரவைப் பருவத்துக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவா் கே.ராஜாபெருமாள், வேலூா் மண்டலச் செயலாளா் எம்.வெங்கடபதி ரெட்டி, மதுரை மண்டலச் செயலாளா் சி.என்.ராஜேந்திரன், சேலம் மாவட்டத் தலைவா் சி.வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT