நாமக்கல்

சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

Din

பரமத்தி வேலூா், ஜூலை 3: பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை சிவன், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், எல்லையம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரா், பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வட பழனியாண்டவா் கோயிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரா், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா், பரமத்தி வேலூா் வல்லப விநாயகா் கோயில் விசாலாட்சி சமேத பானலிங்க விஸ்வேஸ்வரா், கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

படவரி...

சிறப்பு அலங்காரத்தில் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயில் நந்திகேஸ்வரா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT