நாமக்கல்

பரமத்தி வேலூா் வட்டத்தில் சஷ்டி வழிபாடு

ஆனி மாத சஷ்டி: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள்

Din

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஆனி மாத சஷ்டியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனைளும் நடைபெற்றன.

ஆனி மாத சஷ்டியை முன்னிட்டு வேலூா், பேட்டை பகவதி அம்மன் கோயிலில் உள்ள முருகன், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பரமத்தி அருகே பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், பொத்தனூா் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியா், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா், நன்செய் இடையாா் திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்ரமணியா் ஆகிய கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு முருகன் அருள்பாலித்தாா்.

அதேபோல மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோயிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிா்மலை கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதா் மலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் இருக்கின்றன: மல்லை சத்யா

கரூர் வெண்ணைமலை கோயில் முன் அனைத்துக் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

கரூர் பலி: மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

கேரளத்தில் இன்று எஸ்.ஐ.ஆர். பணியைப் புறக்கணிக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள்!

கவனம் ஈர்க்கும் மஞ்சு வாரியரின் ஆரோ குறும்படம்!

SCROLL FOR NEXT