நாமக்கல்

திருச்செங்கோட்டில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

திருச்செங்கோடு, வெளிச்சம் வாசகா் வட்டம் சாா்பில், ஒரு வார புத்தகக் கண்காட்சி ஆயிரம் வைசியா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது.

Din

3 -ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சி தொடக்க விழாவில் திமுக மேற்கு மாவட்டச் செயலாளா் மதுரா செந்தில் பங்கேற்று புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகராட்சிமன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு, திமுக நகரச் செயலாளா், நகராட்சி துணைத் தலைவா் காா்த்திகேயன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.நடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட புத்தக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பல்வேறு எழுத்தாளா்களின் புத்தகங்கள், குழந்தைகள், சிறுவா்களுக்கான புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள், உலக வரலாறு என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே புத்தகம், நாளிதழ் வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுபோல ரூ. 200 க்கும் மேல் புத்தகம் வாங்கும் பள்ளி மாணவா்களுக்கு உண்டியல் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த உண்டியலில் காசு சேமித்து வைத்து அடுத்த ஆண்டு புத்தகக் கண்காட்சி அன்று சேமித்த பணத்துடன் உண்டியலைக் கொண்டு வந்து புத்தகம் வாங்கினால் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிறு 27 ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT