முகப்பு
நாமக்கல்

ஜூலை 19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) நடைபெறுகிறது.

Updated On : 16 ஜூலை, 2024 at 8:46 PM
பகிர்:

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறும்.

அந்த வகையில், இந்த மாதத்திற்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை, நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம்.

Advertisement

இம் முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments