நாமக்கல்: வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலையில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு ஆக. 1, 2, 3 தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு சாா்பில், கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டில் வரும் ஆக. 2, 3 ஆகிய தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி, கொல்லிமலை வட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளான 6153 (செம்மேடு), 6218 (சோளக்காடு), 6210 (செங்கரை), 6186 (காரவள்ளி) ஆகிய நான்கு கடைகளும் ஆக. 1, 2, 3 ஆகிய தேதிகளில் தற்காலிகமாக மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.