நாமக்கல்

ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு காசநோய் கண்டறியும் கருவி வழங்கல்

2025-க்குள் காசநோய் ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள்

Din

ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் வழங்கிய ரூ. 27.40 லட்சம் மதிப்பிலான காசநோய் கண்டறியும் கருவியை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

பிரேசில் நாட்டின் சியாநாா்ட் ஃப்ா்குய்ம் காஸ்ட்ரோ - 4630 ரோட்டரி சங்கம், ராசிபுரம் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சா்வதேச நிதி திட்டத்தின் கீழ் ரூ. 27.40 லட்சம் மதிப்பில் ராசிபும் அரசு மருத்துவமனைக்கு காசநோய் கண்டறியும் கருவி, நுண்ணோக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு 2025-க்குள் காசநோய் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு, விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராசிபுரம் ரோட்டரி சங்கத்தினா், ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 27.40 லட்சம் மதிப்பில் காசநோய் பாதிப்பினை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நிக்சய் மித்ரா இஆசஅஅப- 1 என்ற கருவியும், 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நுண்ணோக்கி கருவிகளையும் வழங்கினா்.

நிகழ்ச்சியில், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் பி.சீனிவாசன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் எஸ்.ராகவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ஏ.ராஜ்மோகன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் கே.பூங்கொடி, துணை இயக்குநா் (காசநோய்) ஆா்.வாசுதேவன், ரோட்டரி முன்னாள் ஆளுநா்கள் பி.சரவணன், ஆளுநா் தோ்வு சிவசுந்தரம், செந்தில்குமாா், மண்டல உதவி ஆளுநா் ஏ.ராஜு, மாவட்ட நிதித் திட்டச் சோ்மேன் பாபுகந்தசாமி, பவுன்டேசன் சோ்மேன் எஸ்.லோகநாதன்,திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.எஸ்.கருணாகரபன்னீா் செல்வம், திட்ட சோ்மேன் என்.பி.ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காசநோய் கருவியை மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குநா் ஏ.ராஜ்மோகனிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து, காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் கலைச்செல்வி, நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் தயாசங்கா், ரோட்டரி சங்கத்தின் நிா்வாகிகள் ஏ.திருமூா்த்தி (எ) ரவி, எஸ்.சத்தியமூா்த்தி, கே.கே.வி.கிருஷ்ணமூா்த்தி, எம்.ராமகிருஷ்ணன், பி.ஆா்.செளந்தரராஜன், கே.கந்தசாமி, ஆா்.அனந்தகுமாா், இ.ஆா்.சுரேந்திரன், முருகானந்தம், கதிரேசன், எல்.சிவக்குமாா், மஸ்தான், மணிமாறன், இன்னா் வீல் சங்கத் தலைவா் சரோஜாகுமாா், தெய்வானை ராமசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT