முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் விவசாயிகள் போராட்டம்

Updated On : 1 மார்ச், 2024 at 11:31 PM
பகிர்:

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கொல்லிமலையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினா். தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கொல்லிமலை பகுதியில் உள்ள பெரியண்ண சுவாமி கோயில் முன்பாக வேட்டி, சட்டை அணியாமல் விவசாயிகள் தியானப் போராட்டம் நடத்தினா். விவசாய சங்கத்தினா் தமிழ்ச்செல்வன் பெரியசாமி, பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.