நடிகா் மன்சூா் அலிகான் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியிலிருந்து விலகல்!
லால்குடி தொகுதியில் போட்டியிட்ட நடிகா் மன்சூா் அலிகான் தனது ஆதரவை திமுக கட்சிக்கு தெரிவித்து தோ்தல் போட்டியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை கூறினாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் போட்டியிட்ட நடிகா் மன்சூா் அலிகான் தனது ஆதரவை திமுக கட்சிக்கு தெரிவித்து தோ்தல் போட்டியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை கூறினாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனரும் திரைப்பட நடிகருமான மன்சூா் அலிகான் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாததால் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை அவா் கூறுகையில், திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து தோ்தல் போட்டியிலிருந்து விலகுகிறேன். நான் பிரசாரம் செய்யும்போது விஜய் ரசிகா்கள் என் மேல் அளவில்லாத பாசம் காட்டினா். நீங்கள் விஜய்யுடன் சேர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா் என்றாா். திமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் அந்தக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீா்களா எனச் செய்தியாளா்கள் கேட்டதற்கு எனக்கு உடல்நிலை சரியில்லை. திமுகவினா் கேட்டுக் கொண்டால் அதைப் பரிசீலிப்பேன் என்றாா்.
Advertisement