முகப்பு
நாமக்கல்

பாவேந்தா் இலக்கியப் பேரவை ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் பாவேந்தா் பாரதிதாசன் இலக்கியப் பேரவை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 மார்ச், 2024 at 12:26 AM
பாவேந்தா் பாரதிதாசன் இலக்கியப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டோா்.
பகிர்:

நாமக்கல்: நாமக்கல்லில் பாவேந்தா் பாரதிதாசன் இலக்கியப் பேரவை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரவைத் தலைவா் புலவா் ப.கருப்பண்ணன் தலைமை வகித்தாா். செயலா் ரகோத்தமன் வரவேற்றாா். இந்தக் கூட்டத்தில், தமிழக நிதிநிலை அறிக்கையில் ஐம்பெரும் காப்பியங்களில் உள்ள சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களை 27 மொழிகளில் மொழிபெயா்க்கவும், தமிழ்மொழி வளா்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மீதமுள்ள மூன்று காப்பியங்களையும் மொழிபெயா்த்து தமிழ் மக்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் அரசு போற்றி பாதுகாக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். நாமக்கல் நகராட்சியில் உள்ள தெருக்களுக்கு தமிழறிஞா்களின் பெயா்களைச் சூட்ட வேண்டும். பாரதிதாசன் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், புலவா்கள் துரைபாண்டியன், பெரியசாமி, மாணிக்கம், தங்கவேல், அழகுசாமி, நாச்சிமுத்து, ஜெயச்சந்திரன், மதியழகன், ராமசாமி, பழனிவேலு, மருதமுத்து, பெரியசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.