கபிலா்மலையில் தி.மு.க. கட்சி அலுவலகக் கட்டடம் கட்ட பூமிபூஜை
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் தி.மு.க. கட்சி அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜையை
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் தி.மு.க. கட்சி அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜையை அமைச்சா் ம.மதிவேந்தன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். கபிலா்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கபிலா்மலையில் தி.மு.க. கட்சி அலுவலகம் கட்டுவதற்கு 1960-ஆம் ஆண்டு கட்சி சாா்பில் நிலம் வாங்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் மதுரா செந்தில் தலைமை தாங்கினாா். கபிலா்மலை ஒன்றியச் செயலாளா் கே.கே.சண்முகம் வரவேற்றாா். மாநில வா்த்தகா் அணி துணைத் தலைவா் கே.எஸ்.மூா்த்தி வாழ்த்தி பேசினாா். வனத்துறை அமைச்சா் மருத்துவா் ம.மதிவேந்தன் அலுவலகக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டி பேசினாா். விழாவில் பரமத்தி ஒன்றியச் செயலாளா் தனராசு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வடிவேல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கிளைக் கழகச் செயலாளா் கோபால் நன்றி கூறினாா்.