வேளாண் சங்கத்தில் ரூ. 58 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 58 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்: நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 58 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் மொத்தம் 2,558 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,100 முதல் ரூ. 7,649 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 7,670 முதல் ரூ. 8,135 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,219 முதல் ரூ. 6,200 வரையிலும் என மொத்தம் ரூ. 58 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.