நாமக்கல்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Din

வரும் நாள்களில் கோடை வெயிலின் தாக்கம் 104 டிகிரியை தாண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் மூன்று நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென் கிழக்கில் இருந்து வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 101.3 டிகிரியும், குறைந்தபட்சம் 60.8 டிகிரியுமாக காணப்படும். வரும் நாள்களில் பகலில் வெயிலின் தாக்கம் 104 டிகிரியாகவும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும்.

பண்ணையாளா்களுக்கான ஆலோசனை:

காற்றின் வேகம் குறைவதால், கோழிகளுக்கு அதிகளவில் வெப்ப அயற்சி ஏற்படும். எனவே, கோழிகள் உட்கொள்ளும் நீரின் அளவை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு!

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: சோனியா காந்தி

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 60 பேர்!

குருத்வாராவில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி!

திரைவிழாவில் மகாராஜா!

SCROLL FOR NEXT