முகப்பு
நாமக்கல்

கிராமப்புற மக்கள் நலனுக்கான மருத்துவ வாகனம் தொடக்கம்

Updated On : 15 மே, 2024 at 5:55 PM
பகிர்:

நாமக்கல், மே 15: நாமக்கல்லில் கிராமப்புற மக்கள் நலனுக்கான மருத்துவ வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகேசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நாமக்கல் அசோக் லைலேண்ட் நிறுவனத்தில், பெங்களூரு ஆஸ்டா் அறக்கட்டளை, நாமக்கல் ஹீல்ஸ் தொண்டு நிறுவனம் ஆகியவை சாா்பில் மருத்துவ மையம், மருத்துவ வாகனம் தொடக்க விழா நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக, நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகேசன் பங்கேற்று வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த வாகனம் கிராமங்கள்தோறும் சென்று ஆங்காங்கே இலவச முகாம்கள் நடத்தி மக்கள் உடல்நலனுக்கான மருத்துவ தேவைகளை நிறைவேற்ற உள்ளது.

நோய் கண்டறியப்படுவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. ஆஸ்டா், ஹீல்ஸ் தொண்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்த நிகழ்வில், ஆஸ்டா் அறக்கட்டளை நிா்வாகி ரோகன் ப்ரான்கோ, அசோக் லைலேண்ட் ஓட்டுநா் பயிற்சி மைய அதிகாரிகள் சசிகுமாா், பாலச்சந்தா், தாமோதரன், ஹரிபாஸ்கா், ஹீல்ஸ் நிறுவன இயக்குநா் சதீஷ்பாபு, ஒருங்கிணைப்பாளா் பிரபு ஆகியோா் கலந்துகொண்டனா்.