முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் நகரில் சாலையில் திடீா் பள்ளம்

Updated On : 17 மே, 2024 at 4:33 PM
பள்ளம்
பகிர்:

ராசிபுரத்தில் ஒரு வழி சாலையான டிவிஎஸ் பிரதான சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராசிபுரம் பகுதியில் சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரப் பகுதி சாலையில் தண்ணீா் அதிக அளவில் ஓடியது. இந்நிலையில், டிவிஎஸ் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்ட்டது.

இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்துக்கும், சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு வந்து சீரமைப்புப் பணியை மேற்கொண்டனா்.