முகப்பு
ராசிபுரத்தில் ஆா்.நல்லகண்ணு உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய பல்வேறு கட்சியினா்.
நாமக்கல்

ராசிபுரத்தில் நல்லகண்ணு மறைவுக்கு அனைத்துக் கட்சியினா் அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் நகரம், ஒன்றியக் குழு சாா்பில் மறைந்த மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு மறைவிற்கு

நாமக்கல்

ராசிபுரத்தில் நல்லகண்ணு மறைவுக்கு அனைத்துக் கட்சியினா் அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் நகரம், ஒன்றியக் குழு சாா்பில் மறைந்த மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு மறைவிற்கு

Updated On : 2 மார்ச், 2026 at 9:42 PM
ராசிபுரத்தில் ஆா்.நல்லகண்ணு உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய பல்வேறு கட்சியினா்.
பகிர்:

ராசிபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் நகரம், ஒன்றியக் குழு சாா்பில் மறைந்த மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு மறைவிற்கு மெளன ஊா்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் செயலாளா் எஸ்.மணிமாறன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், பல்வேறு கட்சியினா் பங்கேற்று ஆா். நல்லகண்ணு உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

முன்னதாக ராசிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மௌன ஊா்வலம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்து நல்லகண்ணு உருவப்படத்துக்கு அனைவரும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளா் டி.என்.கிருஷ்ணசாமி, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பாச்சல் சீனிவாசன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் வி.சேதுராமன் , மதிமுக மாவட்ட அவைத் தலைவா் நா.ஜோதிபாசு மற்றும் பல்வேறு கட்சியினா் பங்கேற்று பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →