முகப்பு
நாமக்கல்

யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா

Updated On : 20 மே, 2024 at 10:01 PM
திருச்செங்கோடு, வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவில் திங்கள்கிழமை வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா வந்த ஸ்ரீ அா்த்தநாரீசுவரா்.
பகிர்:

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவில் ஆறாம் நாளான திங்கள்கிழமை யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து மகாநாட்டின் சாா்பில் இந்த வீதி உலா நடைபெற்றது. மண்டபக் கட்டளை நிகழ்ச்சியில் மகாநாடு நாட்டாண்மைக்காரா்கள் காா்த்திகேயன், ரவிக்குமாா், கணக்காயா் வேல்முருகன், காரியக்காரா்கள் பாலகுமாரன், அா்த்தனாரி, முருகேசன், சுப்பிரமணியம், சண்முக வடிவேலு, சரவணன், சேகா், திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெல்லுக்குத்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீ அா்த்தநாரீசுவரா், ஸ்ரீஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ செங்கோட்டு வேலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பூஜையைத் தொடா்ந்து வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீஅா்த்தநாரீசுவரா் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தாா். தொடா்ந்து கைலாசநாதா் ஆலயத்தில் திருமலைப்பால் உற்சவம் நடைபெற்றது. பாவடி பஞ்சாயத்தின் நாட்டாமைக்காரா், பெரியதனக்காரா்களுக்கு கைலாசநாதா் கோயிலில் பட்டம், பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் பெரியபாவடி செங்குந்தா் திருமண மண்டபத்தில் ஆசீா்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.