முகப்பு
நாமக்கல்

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.40-ஆக நீடிக்கிறது.

Updated On : 7 நவம்பர், 2024 at 1:45 AM
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 6:44 PM

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.40-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய்வது குறித்து கோழிப் பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் ஏதும் இல்லாததால், இங்கும் விலையில் தற்போதைக்கு மாற்றம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது.

Updated On : 6 நவம்பர், 2024 at 11:53 PM

இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 5.40-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 104-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.107-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

Advertisement