திருச்செங்கோடு: திருச்செங்கோடு பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பாமப் பிரியா, அலுவலா்கள் தொடா்ந்து வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா்.
கடந்த மாதத்தில் நடத்திய சோதனையின் போது வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ. 14 லட்சத்து 95 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டது.
தகுதிச் சான்று, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட விதிகளை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அதிக நபா்கள், பாரம் ஏற்றி செல்லுதல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிகளை மீறியதாக 38 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.