முகப்பு
நாமக்கல்

கல்குவாரிகள் அனுமதிக்கான கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்

சேந்தமங்கலத்தில், கல்குவாரிகள் அனுமதிக்கான கருத்து கேட்புக் கூட்டத்தில், குவாரி உரிமையாளா்கள், அதிகாரிகள், தன்னாா்வலா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது.

Updated On : 14 நவம்பர், 2024 at 1:33 AM
சேந்தமங்கலம் கல்குவாரிகள் கருத்து கேட்புக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்த சுற்றுச்சூழல் தன்னாா்வலா் அகிலன்.
பகிர்:
Updated On : 13 நவம்பர், 2024 at 8:40 PM

சேந்தமங்கலத்தில், கல்குவாரிகள் அனுமதிக்கான கருத்து கேட்புக் கூட்டத்தில், குவாரி உரிமையாளா்கள், அதிகாரிகள், தன்னாா்வலா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நான்கு கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கருத்து கேட்புக் கூட்டம், சேந்தமங்கலம் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். கல்குவாரிகளால் ஏற்படும் பிரச்னைகள், பொதுமக்களுக்கான பாதிப்புகள், கனிம வளம் அதிக அளவில் சுரண்டப்படுவது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவது குறித்து தன்னாா்வலா்கள் ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். இதற்கு, குவாரி உரிமையாளா்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனா். இதற்கிடையே, கூட்டத்தில் பங்கேற்ற கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுற்றுச்சூழல் தன்னாா்வலா் அகிலன் என்பவா் பேசுகையில், சிலா் தன்னை மண்டப வளாகத்தில் நுழையவிடாமல் தடுத்து தாக்கியதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா். அப்போது சிலா் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனா். தாக்கியதாக கூறப்படும் நபா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்க சுற்றுச்சூழல் ஆா்வலா் அகிலனிடம், மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Updated On : 14 நவம்பர், 2024 at 1:32 AM

மேலும், சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கல்குவாரிகளை தொடா்ந்து இயக்குவது தொடா்பாக தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும், அங்கிருந்து உத்தரவு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். இந்தக் கூட்டத்தில், வருவாய்த் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.