முதல்வா் மருந்தகம் அமைக்க கால நீட்டிப்பு: நவ.30 வரை விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க நவ. 30 ஆம்தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளதாக மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க நவ. 30 ஆம்தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளதாக மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த ஆக. 15 சுதந்திர தின விழா உரையில், பொதுப் பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தாா்.
Advertisement
முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்றிதழ் பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இணையதளம் மூலம் நவ.20 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் நலன் கருதி நவ. 30 வரை கால நீட்டிப்பு செய்து மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.