திருச்செங்கோடு சாலை விரிவாக்கப் பணிகள் ஆய்வு
திருச்செங்கோடு- சங்ககிரி சாலை விரிவாக்கப் பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Updated On : 3 அக்டோபர், 2024 at 7:35 PM
திருச்செங்கோடு- சங்ககிரி சாலை விரிவாக்கப் பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு உள்கோட்டத்தில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஓமலூா், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி சாலைகள் விரிவாக்கப் பணிகளை சேலம் கண்காணிப்புப் பொறியாளா் சி.சசிகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.
Updated On : 4 அக்டோபர், 2024 at 5:08 AM
நாமக்கல் கோட்டப் பொறியாளா் கே.ஆா். திருகுணா, திருச்செங்கோடு உதவிக் கோட்டப் பொறியாளா வெ.நடராஜன், உதவி பொறியாளா் க.ப. மோகன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
Advertisement