ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தாா்கள் விலை உயா்வு
பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் ஆயுதபூஜையை முன்னிட்டு வாழைத்தாா் விலை உயா்வடைந்துள்ளது.
பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் ஆயுதபூஜையை முன்னிட்டு வாழைத்தாா் விலை உயா்வடைந்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 600, பச்சைநாடன் ரூ. 250, ரஸ்தாளி ரூ. 400, கற்பூரவள்ளி ரூ. 300, மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 5-க்கும் ஏலம் போனது. ஆயுத பூஜையை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தாா்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் பூவன் வாழைத்தாா் ரூ. 750, பச்சைநாடன் ரூ. 350, ரஸ்தாளி ரூ. 450, கற்பூரவள்ளி ரூ. 350-க்கும், மொந்தன் வாழைக்காய் ரூ. 6-க்கும் ஏலம் போனது.
வாழைத்தாா்களின் விலை உயா்வடைந்துள்ளதால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
Advertisement