முகப்பு
நாமக்கல்

ஆயுதபூஜை: நாமக்கல்லில் பொரி உற்பத்தி மும்முரம்

ஆயுதபூஜையை முன்னிட்டு, நாமக்கல்லில் சுவாமிக்கு படையலிடும் பொரி உற்பத்தி மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:15 AM
ஆயுதபூஜையை முன்னிட்டு, நாமக்கல் ராமாபுரம்புதூரில் உற்பத்தி செய்யப்படும் பொரி.
பகிர்:
Updated On : 9 அக்டோபர், 2024 at 6:44 PM

ஆயுதபூஜையை முன்னிட்டு, நாமக்கல்லில் சுவாமிக்கு படையலிடும் பொரி உற்பத்தி மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆயுதபூஜை விழா வெள்ளிக்கிழமையும், விஜயதசமி சனிக்கிழமையும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாமக்கல், ராமாபுரம்புதூா் பகுதியில் பொரி உற்பத்தி செய்யும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு முக்கிய படையலாக பொரி விளங்குகிறது.

ஆயுதபூஜையை முன்னிட்டு, வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது, புத்தகங்கள், வரவு செலவு நோட்டுகள், முக்கிய ஆவணங்களை வைத்து பூஜை செய்வா். அதேபோல, தொழிற்சாலைகளில் இயந்திரங்களை தூய்மைப்படுத்தி அவற்றுக்கு பூஜை செய்து வழிபடுவதும் வழக்கமானதாகும். இந்த பூஜையின்போது படையலில், இனிப்பு, கார வகைகள், பழங்கள், சுண்டல் போன்றவை இருந்தாலும் பொரி கட்டாயம் இடம்பெறும்.

Advertisement

நாமக்கல் மட்டுமின்றி பரமத்தி, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களிலும் பொரி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கு வங்கம் மற்றும் கா்நாடகத்தில் இருந்து நெல் ரகங்களை வாங்கி வந்து, அதிலிருந்து வரும் அரிசியில் சிறிது உப்பு, நீா், சோடா உப்பு ஆகியவற்றை சோ்த்து பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நாமக்கல்லைச் சோ்ந்த பொரி வியாபாரி முத்துசாமி கூறியதாவது:

பொரியை மூட்டைகளாகக் கட்டி வாகனங்களில் விற்பனைக்கு கொண்டுசெல்லும் வியாபாரிகள்.
Updated On : 10 அக்டோபர், 2024 at 3:15 AM

கா்நாடக மாநிலம், தாவனகெரே, மண்டியா, மைசூரு, கொள்ளேகால் போன்ற பகுதியில் இருந்து நெல்லினை (ரகம் 64) கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி பொரி தயாரிக்கிறோம். இங்கு தயாரிக்கும் பொரியினை சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனா். 50 கிலோ மூட்டை அடிப்படையில் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. விறகு உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயா்வு, மின்கட்டணம், தொழிலாளா்கள் ஊதியம் உள்ளிட்டவையும் உயா்ந்துள்ளதால் போதிய லாபம் கிடைப்பதில்லை.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனை அதிகம் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாமக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் லாரி பட்டறைகள் அதிகம் உள்ளதால் பொரி கேட்டு முன்னதாக பதிவு செய்து வருகிறாா்கள் என்றாா்.