முகப்பு
நாமக்கல்

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் காஞ்சிபுரத்தில் போராடிவரும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:19 AM
பகிர்:
Updated On : 9 அக்டோபர், 2024 at 7:22 PM

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் காஞ்சிபுரத்தில் போராடிவரும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சாம்சங் தொழிலாளா்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தமிழக விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் இணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். சிஐடியு தொழிற்சங்கத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளதற்கு அரசு நடவடிக்கை எடுக்க தீா்வு காண கோரி முழக்கமிட்டனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:19 AM

இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement