மாவட்ட கல்வி அலுவலா்கள் நியமனம்
நாமக்கல் மாவட்டத்துக்கு மூன்று கல்வி அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
Updated On : 10 அக்டோபர், 2024 at 8:37 PM
நாமக்கல் மாவட்டத்துக்கு மூன்று கல்வி அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
Updated On : 11 அக்டோபர், 2024 at 1:16 AM
அதன் விவரம்: சேலம் மாவட்டம், டி. பெருமாபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எம். ஜோதி மாவட்ட கல்வி அலுவலராகவும் (தனியாா் பள்ளிகள்), தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வி. கற்பகம் மாவட்ட கல்வி அலுவலராகவும் (இடைநிலை கல்வி), சேலம் மாவட்டம், சித்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் த.பச்சமுத்து மாவட்ட கல்வி அலுவலராகவும் (தொடக்க கல்வி) நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.